Monday, 9 March 2015


மகளிர் தினம் 

பெண்களை நாடாகவும், நதியாகவும், மொழியாகவும் கருதி புகழ்வதையும், பெண்மையை போற்றுகிறோம் என்று பம்மாத்து பண்ணுவதையும் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பெண் என்பவள் நம்மைப் போல் ரத்தமும் சதையுமாய், கோபதாபங்கள், விருப்பு-வெறுப்புகள் மற்றும் ஆசாபாசங்கள் உள்ள சக மனுஷியாய் பார்த்தாலே போதும். அவள் சிந்தனைகள், இலக்குகள், உடை, நடவடிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கவோ விமர்சிக்கவோ நமக்கு அதிகாரமும் இல்லை; தகுதியும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சேரனுக்கு ஒரு ஜே!

திருட்டு டிவிடிக்களை ஒழிக்க சேரன் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டுவோம். வெறும் 50 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி என்பது அதிசயம் ஆனால் உண்மை. நான் வாங்கி பார்த்தேன். அருமையான தெள்ளத்தெளிவாந பிரிண்ட்; துல்லியமான ஒலி. இது வெளியான அன்றே நெட்டிலும் வந்தது கொடுமை. என்றாலும் இதை பதிவிறக்கம் செய்ய தேவையான நெட் கட்டணத்தைவிட ஒரிஜினல் டிவிடி மலிவு என்று நினைக்கிறேன். புது முயற்சியை ஆதரிப்போம். படத்தயாரிப்பாளரை வாழவைப்போம். இதுதான் உண்மையான் உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி (Win-Win situation) சூழல்

Image result for jk ennum naNbanin kathai

No comments:

Post a Comment