29-05-2018 அன்று 1968 P K N SSLC BATCH நண்பர்களின் கூட்டம் K. பாண்டி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அதில் திருவாளர்கள் K. பாண்டி, N P ராஜன், D. சிக்கந்தர் ஹயாத், M ராஜாராம், S சுப்பிரமணியன், V பெருமாள், லத்திப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலாவதாக நிதி நிலைமை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இன்றைய தேதியில் இருப்பு ரூ.35137/-
எதிர்காலத்தில் நமது 1968 P K N SSLC BATCH நண்பர்களின் சார்பாக நடத்தப்பட இருக்கும் நிதி தேவைப்படும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டு கீழ் காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.ஒவ்வொரு வருடமும் நமது 1968 P K N SSLC BATCH நண்பர்களின் சார்பாக ஆதரவற்ற முதியோர் இல்லம்,அநாதை இல்லம், போன்ற பிறர் உதவியை எதிர்பார்க்கும் நிறுவனங்களுக்கு, அவர்களின் தேவையை ஆய்வு செய்து, குறைந்தபட்சம் ரூ.10000/- மதிப்புள்ள பொருட்களை கொடுத்து உதவுவது.
2. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் முறையில் முதல் 4 நபர்களுக்கு ரூ1000/- , 5 முதல் 8 வரை ரூ 2000/- என்று ஒவ்வொரு 4 பேருக்கும் ரூ1000/- வரை மகிழுந்து செலவுக்கு வழங்கிடுதல்.
3. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்படும். இந்தக்கூட்டங்களுக்கு திருமங்கலம் வாழ் நண்பர்களும் விருப்பப்படும் வெளியூர் நண்பர்களும் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கூட்டச்செலவாக ரூ 5௦௦/- வரை அனுமதித்தல்.
4. ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரியில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளும் படி திருமங்கலத்தில் பொதுவான இடத்தில் சந்திப்பு நிகழ ஏற்பாடு செய்தல். அதற்கு முன்னோடியாக அந்தக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தீர்மானிக்க அதிக பட்ச நண்பர்கள் கூட்டமும் ஏற்பாடு செய்தல்.இந்த இரண்டு கூட்டங்களுக்கான முழு செலவும் பொதுவில் ஏற்றுக் கொள்ளுதல்.
மேற்படி செலவுகளை சமாளிக்க நமது நண்பர்களிடம் ஆண்டு சந்தாவாக ரூ.200/- வசூலிக்கவும், ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு தனியாக சிறப்பு நிதியாக நிதி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
18-19 ஆண்டு சந்தாவினை செப்டம்பர் 2௦18 க்குள் கொடுத்து உதவ நண்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்டு சாந்த மற்றும் சிறப்பு நிதியை நமது குழுவின் ,
திருமங்கலம் இந்தியன் வங்கி
கணக்கு எண் 6390553647 ,
(IFSC Code: IDIB000T145)
க்கு நேரடியாக செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நண்பர்கள் பாண்டி, ஹயாத்,சுப்பிரமணியன். ராஜன் , ராஜாராம் மூலம் பணமாகவும் கொடுக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.



No comments:
Post a Comment